Wednesday, October 30, 2013

கவலையில் அஜித் ரசிகர்கள்..!!

‘ஆரம்பம்’ படம் வெளியாகப்போகிறது என்ற குஷியில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்றினை அளித்துள்ளனர் படக்குழுவினர்.

அஜித், விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ஆரம்பம்.

ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படம் குறித்து நாளுக்கு நாள் புதிய செய்திகள் வந்து ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கின்ற நிலையில் தற்போது வெளியான செய்தி ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.

அதாவது ஆரம்பம் படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது.

இப்போது படத்திலிருந்து ஒரு பாடலை நீக்கி விட முடிவு செய்திருக்கிறார்களாம் படக்குழுவினர்.

ஆரம்பம் பட வெளியீடு கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்ட நிலையில் படத்திலிருந்து ஒரு பாடலை நீக்கி விடுவதான செய்தி ரசிகர்களை கொஞ்சம் கவலையில் ஆழ்த்தியுள்ளதாம்.

1 comment:

  1. www.lizehost.com

    Lize Host India - Web Hosting | Domain registration | Unlimited Web Hosting | Windows Hosting...

    ReplyDelete