Wednesday, October 30, 2013

திக்கித் திணறிய ப்ரியா ஆனந்த்

யுவனின் இசையில் பாட முடியாமல் திக்கித் திணறிவிட்டாராம் ப்ரியா ஆனந்த்.

ஹீரோக்களை அடுத்து ஹீரோயின்களும் இப்போது பாடுவதில் ஆர்வம் செலுத்துகின்றனர்.

ரம்யா நம்பீசன் பாண்டிய நாடு படத்தில் 'பை பை பை கலாய்ச்சி வை' பாடல் பாடினார்.அந்தப் பாடல் இப்போது எக்கச்சக்கமாக லைக்ஸ் வாங்கி ஹிட் அடித்திருக்கிறது.

பிந்துமாதவியும் இமானிடம் பாடுவதற்கு வாய்ப்பு கேட்டிருக்கிறார்.

மேலும் லட்சுமிமேனனும் தான் நடிக்கும் படங்களில் ஒரே ஒரு பாட்டாவது பாட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறாராம்.

இதே ஆசை ப்ரியா ஆனந்துக்கும் வந்ததாம். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வை ராஜா வை படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் தன் பாட்டுத் திறமை குறித்து அள்ளிவிட்டுள்ளார் ப்ரியா.

யுவனும் ஒரு பாடலைப் பாட வாய்ப்பு கொடுக்க, அதில் ரொம்பவே திணறிப் போய்விட்டாராம்.

பல டேக்குகள் வாங்கியும் சரியாகப் பாட முடியாததால், ஸ்டுடியோவிலிருந்து பாடாமலேயே வெளியே வந்துவிட்டாராம் ப்ரியா ஆனந்த்.

1 comment:

  1. www.lizehost.com

    Lize Host India - Web Hosting | Domain registration | Unlimited Web Hosting | Windows Hosting...

    ReplyDelete