‘அஜீத் மாதிரி ஒரு நல்ல மனசு கொண்ட நடிகரை நான் சினிமாவில் பார்த்ததே இல்லை’ என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார் நடிகை நயன்தாரா.
அஜித்துடன் ஏற்கனவே பில்லா, ஏகன் ஆகிய படங்களில் இணைந்து நடித்தார் நயன்தாரா. தற்போது மூன்றாவது படமாக ‘ஆரம்பம்’ படத்திலும் அஜித்துடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
இப்போது பீல்டுக்கு வந்த இளம் ஹீரோக்களே எனக்கு அந்த நடிகையை ஜோடியாப் போடுங்க, இந்த நடிகையை ஜோடியாப் போடுங்க என்று டைரக்டர்களுக்கு டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ‘ஆரம்பம்’ படத்தில் நயன்தாரா தான் உங்களுக்கு ஜோடி என்று டைரக்டர் விஷ்ணுவர்தன் அஜித்திடம் சொன்னபோது எந்த ஆட்சேபனையும் சொல்லாமல் உடனே ஓ.கே சொல்லி விட்டாராம் அஜித்.
தனது இரண்டு காதல் சர்ச்சைகளால் தமிழில் மார்க்கெட் சரியும் என்று நினைத்த நயன்தாராவுக்கு அஜீத் ஜோடியாக ‘ஆரம்பம்’ படத்தில் நடித்திருப்பது உற்சாகத்தை கொடுத்துள்ளது.
தீபாவளிக்கு ரிலீசாகும் ‘ஆரம்பம்’ படத்தின் மூலம் தனது மார்க்கெட்டை இன்னும் பெரிய அளவுக்கு கொண்டு போக திட்டமிட்டிருக்கும் நயன்தாரா அஜித்தை மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.
“அஜீத் நல்ல மனம் கொண்டவர். தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களை மதிப்பதில் கெட்டிக்காரர். பெரும்பாலும் ஒரு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் முன்னணி ஹீரோ இருந்தால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைத்தான் டைரக்டர் படமாக்குவார். அந்த ஹீரோவும் அவருடைய சீன்களைத்தான் முதலில் எடுக்க வேண்டும் என்று நினைப்பார்.
ஆனால் அஜீத் அப்படி இல்லை. மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடிக்கும் வரை அங்கேயே பொறுமையாக காத்துக் கொண்டிருப்பார். அவர்கள் நடிக்கும் போது நடிப்பில் குறை தெரிந்தால் அதை சரி செய்ய அட்வைஸும் கொடுப்பார். அவரைப் போல நல்ல மனம் கொண்ட ஒரு மனிதரை என் சினிமா வாழ்க்கையில் நான் பார்த்ததே கிடையாது.
இவ்வாறு புகழ்ந்திருக்கிறார் நயன்தாரா.
அட நீங்க வேற அவரு இந்த புகழ்ச்சி கூட பிடிக்காதுன்னு சொல்வாருங்க…
No comments:
Post a Comment