ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் அறுபத்து மூன்றை ட்ரை பண்ணிவிட்டார். எப்போதாவது கிடைக்கும் துக்கடா வேடங்கள் தவிர எதுவும் பெயர்வதாக இல்லை. முக்கியமாக நாற்பது பிளஸ்ஸில் இருக்கும் நடிகர்களே, வயசாயிடுச்சே அம்மணிக்கு என்று ஒதுக்குகிறார்கள்.
இதற்கு மேலும் நன்றி கெட்ட சினிமாவில் இருக்க வேண்டுமா? கெட்டி மேளத்துக்கு நான் தயார் என தெரிவித்திருக்கிறாராம் முத்தழகி. விரைவில் அவரின் பெங்களூரு வீட்டில் டும் டும் பிப்பீ டும் டும் பிப்பீ சத்தம் கேட்கலாம்.
இந் நிலையில்….
Tamil Actress Gossip முத்தழகின் அப்படியே உல்டா நிலையில் இருக்கிறார்கள் அகர்வால் ஸ்வீட்கடை நடிகை. அவரின் தங்கைக்கு விரைவில் மும்பையில் திருமணம் நடக்கிறது. தங்கைக்கே திருமணம் நடத்துகிறார்கள்.
அப்போ, அக்காவுக்கு உடனே திருமணம் இருக்குமே என்று கொளுத்திப் போடுகிறார்கள் பொறாமைக்காரர்கள்.
தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பிஸியாக நடித்து வரும் நிலையில் திருமணமா? இப்போதைக்கு அந்தப் பேச்சுக்கே இடமில்லை என தானே வலியச் சென்று பேட்டி தருகிறார் நடிகை.
No comments:
Post a Comment