Tuesday, November 5, 2013

அஜித்தின் புதுடிரண்ட்!

ரசிகர்களுக்கு புதுவிதமாக விருந்தளிக்க முடிவு செய்துள்ளாராம் அஜித்.

ஆரம்பம் இந்த வருடத்தின் ஹிட் படமாக கலெக்‌ஷனை அள்ளிக்கொண்டு இருக்கிறது.

ஆனால் படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கின்றன என்று கவலைப்பட்டுள்ளாராம் அஜித்.குறிப்பாக பச்சிளம் குழந்தை மீது சூடான அயர்ன் பாக்ஸை அஜித் வைக்க முயலும் காட்சி தல மனதை மிகவும் சங்கடப்படுத்தி விட்டதாம்.

இதனால் தன் முகம் காண நம்பி வரும் ரசிகனை ஏமாற்றக் கூடாது என்பதற்காக தன்னுடைய ஒவ்வொரு படமும் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக அமைய வேண்டும் என முடிவெடுத்து விட்டாராம்.

இனிமேல் அஜித்தின் கதை கேட்கும் பாணியே வேறு மாதிரி இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment