ஆரம்பம் படத்தின் வெற்றியை பார்த்து பாலிவுட் வட்டாரத்தில் இருக்கும் முன்னணி ஹீரோக்கள் இந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்களாம்.
சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கில் ஹிட்டாகும் படங்களை இந்தியில் ரீமேக் செய்வது பேஷனாகி விட்டது அதேபோல் தற்போது அஜித்தின் ஆரம்பம் படத்தை இந்தியின் முன்னணி ஹீரோவான அக்ஷய் குமார் ஆரம்பம் படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புவதாக கூறியிருக்கிறார்.
இதற்கு முன்பு விஜயின் துப்பாக்கி படம் ஹிட்டானதும் அதையும் இந்தியில் ரீமேக் செய்ய கிளம்பிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். துப்பாக்கி படத்தின் இந்தி ரிமேக்கிலும் அக்ஷய் குமார் தான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆரம்பம் படத்தின் ரீமேக் உரிமை குறித்து படத்தின் தயாரிப்பாளரிடம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
No comments:
Post a Comment