கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள திருவாளியூரைச் சேர்ந்தவர் ராணி (வயது 24). கூலி வேலை செய்து வந்தார். இவரது மகள் ஆப்ஸ் (4). கணவரை பிரிந்த ராணி மகளுடன் தனியே வசித்து வந்தார். ஆப்ஸ் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடியில் படித்து வந்தாள்.
இந்த நிலையில் ராணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (29) என்ற வாலிபருக்கும் இடையே களளத்தொடர்பு ஏற்பட்டது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர். ரஞ்சித் ஜே.சி.பி. டிரைவராக உள்ளார்.
ரஞ்சித்தின் நண்பர் கேசின் (19). அவரும் ராணியை விரும்பினார். நண்பரின் விருப்பத்தை ராணியிடம் ரஞ்சித் கூறினார். ராணியும் சம்மதம் தெரிவித்தார். நண்பர்கள் இருவரும் ராணியிடம் உல்லாசமாக இருந்து வந்தனர்.
கள்ளக்காதலர்களின் உல்லாசத்துக்கு 4 வயது சிறுமி ஆப்ஸ் இடையூறாக இருப்பதாக நினைத்தனர். எனவே அவளை தீர்த்துக்கட்டவும் முடிவு செய்தனர். கடந்த 29–ந் தேதி ராணி வேலைக்கு சென்று விட்டார். ராணியின் வீட்டுக்கு வந்த ரஞ்சித்தும், கேசினும் சிறுமி என்றும் பாராமல் ஆப்சின் கழுத்தை நெரித்துக்கொன்றனர்.
பின்னர் தங்களது ஜே.சி.பி.யில் சிறுமியின் உடலை கொண்டு சென்று 12 கி.மீ. தூரத்தில் குழிதோண்டி புதைத்து விட்டனர். வீடு திரும்பிய ராணி தனது குழந்தை அங்கு இல்லாதது கண்டு திடுக்கிட்டார். அக்கம் பக்கம் தேடினார். பலன் இல்லை. எனவே சோட்டானிக்கரை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கள் பாணியில் விசாரித்தனர். அப்போது ராணியின் சம்மதத்தின் பேரிலேயே நண்பர்கள் இருவரும் சிறுமியை கொன்று புதைத்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து 4 வயது சிறுமியை அவளது தாய் கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment