தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஸ்ரேயா நடித்துள்ளார். 2001–ல் இருந்து நடித்து வருகிறார். ரஜினி ஜோடியாக ‘சிவாஜி’ படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். கடைசியாக தமிழில் ‘ரெளத்திரம்’ படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தார். 2011–ல் இப்படம் வந்தது. அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
சமீபத்தில் கன்னடத்தில் நடித்த ‘சந்திரா’ படத்தை தமிழிலும் வெளியிட்டனர். ஸ்ரேயா மார்க்கெட் வெகுவாக சரிந்து விட்டது. இளம் கதாநாயகிகள் வரத்தால் ஸ்ரேயாவுக்கு படவாய்ப்புகள் வரவில்லை. ஸ்ரேயாவுக்கு 31 வயது ஆகிறது. எனவே அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் காஜல் அகர்வாலிடம் சினிமாவில் உயர்ந்த நிலையில் இருந்த நடிகை ஒருவர் இப்போது ஓய்வு பெறவேண்டும் என்றால் எந்த நடிகையை சொல்வீர்கள் என்று டி.வி. நிகழ்ச்சியொன்றில் கேட்கப்பட்டது.
அதற்கு ஸ்ரேயா என்று காஜல் பதில் அளித்தார். தொடர்ந்து அவர் கூறும்போது,சினிமாவில் 30 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே கிழவி அல்லது ஆண்ட்டி என்றுதான் அழைப்பார்கள். எனவே த்ரிஷா, ஸ்ரேயா போன்றவர்கள் அவர்களாகவே அவர்களுடைய மரியாதையை காப்பாற்றிக்கொண்டு சினிமாவில் இருந்து வெளியேறிவிடுவது நல்லது என்று கூறினார்.
இவரது பேட்டியை கேட்டு ஸ்ரேயாவும், த்ரிஷாவும் செம கடுப்பில் இருப்பதாக கோலிவுட்டில் புகைகின்றது.
No comments:
Post a Comment