தமிழ் ரசிகர் ஒருவர் ‘ஐ லவ் யு’ சொன்னார் என்று வெட்கப்படுகிறார் நஸ்ரியா.
கேரளத்து வரவான நஸ்ரியாவுக்கு நேரம் நன்றாக இருந்ததால் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியானர்.
தொப்புள் விவகாரத்தால் சில பிரச்சனைகளை சந்தித்தாலும் புது படங்களின் கமிட்மெண்ட்கள் குவிந்து கொண்டுதான் இருக்கின்றன.தற்போது மலையாளத்தில் நிவின் போலி, துல்கர் சல்மான் ஆகியோருடன் பிசியாக நடித்து வருகிறார்.
மேலும் பாலாஜி மோகன் இயக்கவிருக்கும் படம் மற்றும் நீ நல்லா வருவாட படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் தீபாவளி வாழ்த்துக்ளோடு தமிழ் ரசிகர்கள் பற்றி கூறிய நஸ்ரியா, தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நினைச்சா பயமா இருக்கு என்றும் அதை பூர்த்தி செய்ய முயற்சி பண்ணனும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் ஒரு நாள் அம்மா கூட போயிட்டு இருந்தேன், ஒருவர் ஓடிவந்து ‘ஐ லவ் யூ’ உங்க கண்ணு ரொம்ப பிடிக்கும்னு சொல்லிட்டு ஓடிட்டாரு, அதை இப்போ நெனச்சாலும் சிரிப்பு வரும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment