Wednesday, November 13, 2013

வீரம் vs ஜில்லா? ஜெயிக்கப் போவது யாரு?

அஜித்தின் 'ஆரம்பம்'  தீபாவளிக்கு முதல் மூன்று நாட்கள் முன்னதாக வெளியாகியிருந்தது.

வெளியான முதல் நாளே படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது உறுதியாகிவிட்டது.


அமெரிக்காவில் 'ஆரம்பம்' மிகப் பெரிய வசூல் சாதனையைப் படைத்திருக்கிறது.

இதனால் அஜித் தரப்பினர் அதிக உற்சாகத்தில் இருக்கிறார்கள்.இதேபோல, 'வீரம்' படத்தையும் பயங்கர ஹிட்டாக்க வேண்டும் என்று பரபரப்பாக செயல்படுகிறார்கள்.

பொங்கலுக்கு ஐந்து நாட்கள் முன்னதாக 'வீரம்' படத்தை ரிலீஸ் செய்தால், மொத்த விடுமுறை தினத்தையும் திருவிழா ஆக்கிவிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

விஜய்யின் 'ஜில்லா' படமும் ரிலீஸ் ஆவதால், இரண்டு படங்களின் வசூலும் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த ஐடியாவாம்.

இந்த இரண்டு படங்களில் எந்தப் படம் ஹிட்டடிக்கப் போகிறது என்பதைப் பார்க்க ஜனவரி 10 வரை காத்திருக்க வேண்டும்.

No comments:

Post a Comment