6 நாட்களில் சுமார் 50 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது அஜித்தின் ‘ஆரம்பம்’.
தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னதாகவே ரிலீஸ் ஆகி விட்டது அஜித்தின் ‘ஆரம்பம்’. தனக்கென்று ரசிகர்க மன்றங்கள் வைத்து அதற்கு ஆங்காங்கே ப்ராஞ்சுகளையும் ஓப்பன் பண்ணி வசூலை அள்ள நினைக்கும் ஹீரோக்கள் மத்தியில் தனது ரசிகர் மன்றங்கள் எல்லாவற்றையும் கலைத்து விட்டு தைரியமாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அஜித். அவர் மன்றங்களை கலைத்த பிறகு ரிலீசான மங்காத்தா படம் வசூலில் பெரிய சாதனையை செய்தது. இப்போது அதற்கு பிறகு ஆரம்பம் படம் அந்த வசூல் சாதனை லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது.
தமிழ்சினிமாவில் எப்போதுமே பிரம்மாண்ட ஓப்பனிங் கொண்ட ஹீரோக்களில் ஒருவர் நடிகர் அஜித். அவரது படம் ரிலீசாகும் போதெல்லாம் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் மொய்த்துக் கொள்ளும். அஜித்துடன் இப்படத்தில் நயன்தாரா, ஆர்யா, ராணா, டாப்ஸி என பல நட்சத்திரங்கள் இருந்தும் அஜித்துக்காகவே இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் தியேட்டரில் அலைமோதியது.
அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு கடந்த 31- ஆம் தேதி ரிலீசானது ‘ஆரம்பம்’ படம். எதிர்பார்த்ததுக்கும் அதிகமாகவே நல்ல வரவேற்பை கொடுத்தார்கள் ரசிகர்கள்.
‘பில்லா’ ஹிட்டுக்குப் பிறகு விஷ்ணுவர்தன் – அஜித் காம்பினேஷனில் ரிலீசாகும் படம் என்பதால், இதுவரை இல்லாத அளவிற்கு ‘ஆரம்பம்’ படத்திற்கு டிக்கெட் புக்கிங்கும் வேகமாக நடைபெற்றது. முதல் நாள் புக்கிங்கிலேயே ஒரு வாரத்திற்கு தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆகியது.
இப்படி பல வகைகளிலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ‘ஆரம்பம்’ படத்தின் வசூலும் திருப்தியாக இருப்பதாக படத்தை வாங்கி ரிலீஸ் செய்த வினியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் பெரிய விநியோக ஏரியாவான என்.எஸ்.சியை வாங்கிய ஐங்கரன் நிறுவனத்திடமிருந்து செங்கல்பட்டு ஏரியாவை மட்டும் இராம.நாராயணின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியது.
செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் 108 திரையரங்குகள் ரிலீசாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதில் பல தியேட்டர்களில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘பாண்டிய நாடு’ படங்கள் ஏற்கனவே கமிட் செய்யப்பட்டு விட்டதால், 2 நாட்களுக்கு மட்டும் ‘ஆரம்பம்’ படம் திரையிடப்பட்டது.
2 நாட்களுக்குப் பிறகு மேற்படி படங்களின் வசூல் திருப்திகரமாக இல்லாததால் மூன்றாவது நாளில் இந்த படங்களின் காட்சிகள் குறைக்கப்பட்டு, ‘ஆரம்பம்’ படம் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
இதுவரை வந்த தகவலின்படி, ஆரம்பம் படத்தின் முதல் நாள் வசூல் 10.20 கோடியாக இருந்ததாகவும், ரிலீஸான 6 நாட்களில் ரூ.50 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வெளிநாடுகளிலும் ரிலீசான மூன்று நாட்களில் சுமார் 1. 34 கோடி ரூபாயை வசூல் செய்து யு.கே பாக்ஸ் ஆபீசில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது ஆரம்பம்.
ஆனால் படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.60 கோடி ரூபாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, செங்கல்பட்டு மட்டுமன்றி கோயம்புத்தூர், சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஏரியாக்களிலும் ‘ஆரம்பம்’ படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவில் திருப்திகரமாக இருப்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று வாங்கிய விநியோகஸ்தர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
‘தல’யை நம்பினோர் கைவிடப்படார்…
No comments:
Post a Comment