ஜூனியர் நாயகனும், ‘ஜல்’ நடிகையும் ஜோடியாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ஒரு தெலுங்கு படம், ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து ஜூனியர் நடிக்க, அந்த படத்தின் இரண்டாம் பாகம் புதிதாக தயாராக இருக்கிறது.
இந்த படத்திலும் தன்னையே கதாநாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என்று ‘ஜல்’ நடிகை ஜூனியரிடம் வற்புறுத்தி வருகிறார்.
அவருக்கு போட்டியாக, ‘சம’கால நடிகை தன்னைத்தான் அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஜூனியருக்கு தூது விட்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி ஜூனியரை ஸ்பெஷலாக அடிக்கடி கவனித்து வருகிறாராம். அதனால் அந்த படத்தில் சம கால நடிகைக்கு வாய்ப்பு கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இதனால் செம கடுப்பான ஜல் நடிகை படத்தின் இயக்குனரையும், தயாரிப்பாளரையும் ஸ்பெஷலாக கவனித்து அந்த பட வாய்ப்பு தனக்கே வேண்டும் என வற்புறுத்தி வருகிறார். இரு நடிகைகளின் போட்டி கவனிப்பை கண்டு தெலுங்கு திரையுலகம் அதிர்ந்து போயுள்ளது.
www.lizehost.com
ReplyDeleteLize Host India - Web Hosting | Domain registration | Unlimited Web Hosting | Windows Hosting...