கடந்த இரண்டு நாட்களாக தமன்னாவிற்கும், விராத் கோஹ்லிக்கும் திருமணம் நடந்ததாக வதந்தி கிளம்பி கோலிவுட்டையே கலக்கிக்கொண்டு இருக்கின்றது. இதனால் வீரம் படக்குழுவினர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் அஜீத் இதுகுறித்து கலந்து ஆலோசித்து தமன்னாவிடம் விளக்கம் கேட்க முடிவு செய்தனர்.
தமன்னாவிற்கு செய்தி அனுப்பி உடனடியாக அவரை அழைத்து இதுகுறித்து விளக்கம் கேட்டனர். காதல், திருமணம் என்பது குறித்து வதந்தி கிளம்பிக்கொண்டிருப்பது படவெற்றியை பாதிக்கும் என்றும் எனவே இதுகுறித்து உடனடியாக தமன்னா தரப்பில் இருந்து மறுப்பு அறிக்கை ஒன்றை பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்றும் படக்குழுவினர் சார்பில் அஜீத் தமன்னாவிடம் கருத்து தெரிவித்ததாகவும், அதற்கு தமன்னா, காதல், திருமணம் என்பதெல்லாம் எனது தனிப்பட்ட விஷயம். இதில் தயவு செய்து யாரும் தலையிட வேண்டாம் என்றும், இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தனக்கு தெரியும் என்றும், மறுப்பு அறிக்கை விடலாமா வேண்டாமா என்பது குறித்து தான் உரிய நேரத்தில் முடிவு எடுத்துவிடுவேன் என்றும் படப்பிடிப்பில் நான் எப்படி நடிக்க வேண்டும் என்று மட்டும் எனக்கு ஆலோசனை கூறுங்கள், எனது தனிப்பட்ட விஷயங்களில் வீரம் படக்குழுவினர் யாரும் எனக்கு எவ்வித அறிவுரையும் கூற வேண்டாம் என்றும் காட்டமாக கூறினாராம்.
இதனால் கடுப்பான அஜீத் உடனடியாக வெளியே சென்றுவிட்டாராம். தமன்னாவும் தயாரிப்பாளர், மற்றும் இயக்குனரிடம் எதுவும் சொல்லாமல் வெளியே சென்றுவிட்டாராம். இந்த விஷயம் கோடம்பாக்கத்தில் காட்டுத்தீ போல பரவிவருகிறது.
No comments:
Post a Comment