செக்ஸ் சாமியார் அசாரம் பாபுவுக்கு எதிராக 1011 பக்க குற்றப்பத்திரிக்கையை ஜோத்பூர் காவல்துறை பதிவு செய்துள்ளது. அதில் பல திடுக்கிடும் செக்ஸ் லீலைகளை குறிப்பிட்டுள்ளது ஜோத்பூர் போலீஸ்.
கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல், பலாத்காரம், பெண்ணின் கற்பிற்கு களங்கம் விளைவித்தல், ஆட்கடத்தல் மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளை ஜோத்பூர் போலீஸார் தொடர்ந்துள்ளனர்.
அசாரம் பாபுவுடன் பிடிக்கப்பட்ட 4 சக-குற்றவாளிகள் ஒரு குறிப்பிட்ட மைனர் பெண்ணை அசாரமிற்கு விருந்தாக்க மேற்கொண்ட முயற்சிகளும் அம்பலமாகியுள்ளது.
மனாயில் உள்ள அசாரமின் ஆஸ்ரமத்தில் மைனர் பெண்ணை கொண்டு விட்டு விடுவார்களாம், அங்கு செக்ஸ் சாமியார் அசாரம் பாபு தனது உடைகளையும் களைந்து பெண்ணின் உடைகளையும் பலவந்தமாக களைந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் பெண்ணை இவ்வாறு பாலியல் துன்புறுத்தல் செய்து சாடிஸ இன்பம் கண்ட பிறகு அந்தப்பெண்ணை மிரட்டி அனுப்பி வைப்பார்களாம்.
77 நாட்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு 58 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் இப்போது கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச்த்தில் அந்த குறிப்பிட்ட பெண் ஆசிரமத்தில் இருந்த காலத்தில் மருத்துவ உதவி கூட செய்யவில்லையாம். அவரை பல மந்திர தந்திர ஜபங்களில் ஈடுபடுத்தி அவரை தீய சக்திகள் பீடித்திருப்பதாகவும் இதனால் அசாரம் பாபுவை ஜோத்பூரில் சந்திக்கவேண்டும் என்றும் கூறி அங்கு அனுப்பிவைத்தனராம்.
அங்குதான் செக்ஸ் சாமியாரின் நிர்வாண தரிசனம் அந்தப் பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அசாரம் பாபுவும் உதவியாளர் ஷில்பியும் தொடர்ந்து செல்பேசியில் உரையாடுவார்களாம். அவர்கள் பெயரில் இல்லாத சிம் கார்டுகள் அவை. எனவே தீவிரமாக திட்டமிட்டு மாட்டிக்கொள்ளாத வகையில் பல குற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சார்ஜ் ஷீட்டில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் வழக்கம் போல் செக்ஸ் சாமியார் தன் மீது சுமத்தப்படும் குற்றங்கள் எல்லாம் கட்டுக் கதை என்றே கூறிவருகிறார்.
No comments:
Post a Comment