Monday, November 11, 2013

3 பெண்களை ஏமாற்றிய சினிமா டைரக்டர் பற்றி திடுக் தகவல் அம்பலம்!

குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் ரவி தம்பி (எ) ஜஸ்டஸ் ரவி (43). வாச்சாத்தி, பனிமலர்கள் உள்ளிட்ட தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார். தற்போது டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து, தடை செய்யப்பட்ட பகுதி என்ற பெயரில் படம் எடுக்க திட்டமிட்டிருந்தார்.

தவிர மலையாளத்தில் சீரியல்களையும் இயக்கியுள்ளார். இயக்குனர் ரவி தம்பியின் முதல் மனைவி சைலஜா, 3வது மனைவி அனிதா பால்நேசம், தொடர்ந்து செல்வகுமாரி, குளோரிபாய் என 5 பேரை திருமணம் செய்துள்ளார். குமரி மாவட்டம் மற்றும் கேரளாவை சேர்ந்த பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது.

ரவி தம்பியின் நடவடிக்கையில் 3வது மனைவி அனிதாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரித்த போது, பூதப்பாண்டி அருகே செல்வகுமாரியை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிந்தது. அதன்பின் இருவரும் சேர்ந்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ரவியை மடக்கி பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அவர்கள் சொன்னபடி ரவியிடம் அனிதாவின் குழந்தையை செல்போனில் பேச வைத்தனர். குழந்தையின் குரலை கேட்டதும் சென்னையில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் பறந்து வந்தார். அங்கு காத்திருந்த 2 மனைவிகளும் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து காரில் ஏற்றினர். பின்னர் மார்த்தாண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ரவிதம்பியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். ரவிதம்பியின் மோசடிகள் குறித்து போலீசார் கூறியதாவது: ரவிதம்பி 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். 9வது வகுப்பு படித்த சிறுமியை காதலித்துள்ளார். பின்னர் கொத்தனார் வேலைக்கு சென்றுள்ளார். பணம் சம்பாதிக்க தக்கலையில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தியிருக்கிறார். வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, பலரிடம் பணம் மோசடி செய்துள்ளார். குமரியை சேர்ந்த அரசியல் கட்சிகளை சேர்ந்த பலருக்கு பெண்களை சப்ளை செய்துள்ளதாகவும் தெரிகிறது.

கடைசியாக சென்னையை சேர்ந்த துணை நடிகை பூஜா என்பவருடன் குடும்பம் நடத்தியதும் தெரிய வந்துள்ளது. இன்னும் எத்தனை பெண்களை இவர் ஏமாற்றி இருக்கிறார் என்பது தெரியவில்லை. இவரால் ஏமாந்தவர்கள் புகார் கொடுக்க முன்வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment