Tuesday, November 12, 2013

இந்தப் படத்தை எப்படி குடும்பத்தோட பார்ப்பாங்க? : யு சர்டிபிகேட் தர மறுத்த சென்சார் போர்டு!

ஒருதலை காதலால் சந்திக்கும் விபரீதங்களை மையமாக வைத்து, ‘மாயை’ என்ற படம் தயாராகி இருக்கிறது. சில மோசமான மனிதர்களிடம் ஹீரோவும், ஹீரொயினும் மாட்டிக்கொண்டு அவர்களிடம் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் கதைதான் இந்தப்படம்.

ஹாலம்மா டாக்கீஸ் சார்பில் ஜே.ஆர்.கண்ணன் தயாரித்து டைரக்ட் செய்துள்ள இந்த படத்தில் சஞ்சய், சனம் ஆகியோர் நடித்துள்ளனர்.

போஸ்ட் பொரொடக்‌ஷன் வேலைகள் எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு போட்டுக் காண்பித்தனர். 


ஆனால் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு படம்னா அதுல ரசிகர்களை கவர்ற விதமா காட்சிகள் இருக்கணும், ஆனா இந்தப்படத்துல உள்ள காட்சிகள் ரசிகர்களை மிரட்டுற மாதிரியும், அவங்களை அச்சுறுத்துற மாதிரியும் இருக்கு. அதனால் யு சர்டிஃபிகேட் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார்களாம்.

ஆனால் எப்படியாவது வரிச்சலுகையை பெற யு சர்டிஃபிகேட் வாங்கியாக வேண்டுமே..? என்று பதறிய டைரக்டர் கண்ணன் சென்சார் அதிகாரிகள் காட்டிய இடங்களிலெல்லாம் கத்தரியை போட்டிருக்கிறார். ஆனாலும் படத்துக்கு கிடைத்ததோ யு/ஏ சர்டிஃபிகேட் தானாம்.

No comments:

Post a Comment