நேற்றைய தினம் பிரபலமான தயாரிப்பாளர்கள் வீடுகளில் இன்கம் டாக்ஸ் அதிகாரிகள் ரெய்டு நடத்தினார்கள். பெரிய படங்களை தயாரிக்க ஒப்பந்தம் போட்டிருக்கும் சமயத்தின் இன்கம் டாக்ஸ் அதிகர்கள் சோதனை போட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளையதளபதி நடிக்கும் ஜில்லா திரைப்படத்தை தயாரிக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி வீட்டிலும், அஜித் நடித்த ஆரம்பம் , கெளதம் + அஜித் இணையும் புதிய படத்தை தயாரிக்கும் ஏ.எம்.ரத்னம் வீட்டிலும், கார்த்தி நடித்து நாளை வெளியாகவிருக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடத்தினார்கள்.. சோதனையின் பின்னர் அதுபற்றி மீடியாவிற்கு தகவல் தர மறுத்துவிட்டனர்.
நடிகர் சந்தானம் வீட்டிலும் ரெய்டு பண்ணினார்கள். அதிக படங்களில் நடிப்பதாலும், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்திருப்பதாலுமே ரெய்டு பண்ணியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
No comments:
Post a Comment