அஜித்தின் நடிப்பில் பொங்கலுக்கு வெளி வரும் வீரம் படத்தின் வெளியீட்டு திகதி கடந்த ஆகஸ்ட் மாதம் வெளி வந்ததில் இருந்தே படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே செல்கிறது.
அவரது வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு உள்ள அவரது தோற்ற பொலிவும், கிராமிய களம் கொண்ட கதை கருவும் அவரது ரசிகர்களுக்கு ஒரு சரியான பொங்கல் விருந்து உத்திரவாதம் என உறுதி அளித்தது.
வீரம் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முற்று பெற உள்ளது.
மிக பிரம்மாண்டமாக பல்வேறு நட்சத்திர குவியலுடன் படமாக்கப்பட்டுள்ள வீரம் நிச்சயம் பொங்கலுக்கு ரசிகர்களை மகிழ்ச்சி ஊட்டும் என பட தயாரிப்பாளர்கள் வெங்கட்ராம ரெட்டி மற்றும் பாரதி ரெட்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment