Tuesday, November 5, 2013

கெமிஸ்ட்ரியில் சிம்பு- ஆண்ட்ரியா: கடுப்பில் ஹன்சிகா?

சிம்பு- ஹன்சிகா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால் கடுப்பில் உள்ளாராம் ஹன்சிகா.

சிம்புவுடன் சேர்ந்துகொண்டு நகைச்சுவை நடிகராக நடித்த தயாரிப்பாளர் வி.டி.வி.கணேஷ் இப்போ ‘இங்க என்ன சொல்லுது’ என்ற படத்தை தயாரித்து ஹீரோவாகவும் நடிக்கிறார்.

படத்தில் இவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். இந்தப்படத்தில் சிம்புவும், ஆண்ட்ரியாவும் இணைந்து நடித்துள்ளனராம்.

இதுகுறித்து வி.டி.வி.கணேஷ் கூறுகையில், சிம்பு, ஆண்ட்ரியா இருவரும் கெஸ்ட் ரோலில் நடிக்கவில்லை என்றும் அதிகநேரம் வரக்கூடிய முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளில் இவர்கள் இருவருக்கும் இடையே அற்புதமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்று சந்தோஷப்பட்டுள்ளார் கணேஷ்.

இந்நிலையில் இங்க என்ன சொல்லுது பற்றி சிம்புவின் காதலி ஹன்சிகாவிற்கு தெரியுமா? என்பதே கொலிவுட் உலகின் சமீபத்திய ஹாட் டாப்பிக்காக வலம் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment