Tuesday, November 5, 2013

அஜித் ரசிகர்களிடன் மன்னிப்பு கேட்ட வரலட்சுமி!!

இந்த தீபாவளிக்கு அஜித்தின் ஆரம்பம், விஷாலின் பாண்டிய நாடு, கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா வெளிவந்திருந்தது. சரத்குமாரின் மகள் வரலட்சுமி விஷாலின் நீண்ட கால தோழி என்பது அறிந்ததே. நேற்றைய தினம் தனது டுவிட்டரில் அஜித், விஷால், கார்த்தின் படத்தை (ஒரே படமாக) வெளியிட்டு ‘இந்த தீபாவளி வின்னர் விஷால்’ என டுவீட் பண்ணியிருந்தார்.

பின்னர் சில அஜித் ரசிகர்கள் வரலட்சுமியிடம் இது பற்றி கோபத்துடன் கேட்க தனது அந்த டுவீட்டை நீக்கியுள்ளார். தொடர்ந்தும் ‘அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாரோ இந்த போட்டோவை அனுப்பியிருந்தார்கள்.. நானு பப்ளிஷ் பண்ணிவிட்டேன்.. ரிலாக்ஸ் தல ஃபான்ஸ்.. நானும் தல ரசிகை தான்’ என தெரிவித்து மீண்டும் டுவீட் பண்ணியிருந்தார்.

 மேலும் வரூ, ’பாண்டிய நாடு வெற்றி பெற்றதால் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.. எனக்கு ரொம்ப நெருக்கமான டீம்…’ என டுவீட் பண்ணியிருந்தார்.

1 comment:

  1. www.lizehost.com

    Lize Host India - Web Hosting | Domain registration | Unlimited Web Hosting | Windows Hosting...

    ReplyDelete