கிரிக்கெட் வீரர் வீராட் கோலியும் தன்னாவும் காதலிப்பதாக கிசுகிசு பரவியுள்ளது. தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். ‘ஹிம்மத்வாலா’ படம் மூலம் இந்திக்கும் போனார்.
தற்போது தமிழில் ‘வீரம்’ படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கிறார். ‘இட்ஸ் என்டர்டெய்ன்மென்ட்’ என்ற இந்தி படத்திலும் ‘ஏகடு’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
தமன்னாவும் வீராட்கோலியும் விளம்பர படமொன்றில் சேர்ந்து நடித்தார்கள். அப்போது இருவருக்கும் நெருக்கம் எற்பட்டது. அடிக்கடி சந்தித்து நட்போடு பழகி வந்தனர். தற்போது அது காதலாக மலர்ந்து திருமணம் வரை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரும் வடமாநிலத்தில் பிரபலமாக இருக்கும் ஒரு கோவிலில் ரகசிய திருமணம் செய்துவிட்டதாகவும், வீரம் படப்பிடிப்பு முடிந்தவுடன் திருமணத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கிசுகிசுவால் வீரம் நாயகன் அஜீத் உள்பட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படத்தின் வெற்றியை இந்த கிசுகிசு பாதிக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.
இந்த செய்தியை தமன்னா மற்றும் விரோத் கோஹ்லி இருவருமே மறுக்கவில்லை. ஆனால் உறுதிப்படுத்தவும் இல்லை. திருமணம் முடிந்துவிட்டதா? அல்லது வெறும் வதந்திதானா என்பது இருவரில் யாராவது ஒருவர் ஊடகங்களில் தோன்றி தெளிவுபடுத்தினால்தான் உண்மை விளங்கும்
www.lizehost.com
ReplyDeleteLize Host India - Web Hosting | Domain registration | Unlimited Web Hosting | Windows Hosting...
www.lizehost.com
ReplyDeleteLize Host India - Web Hosting | Domain registration | Unlimited Web Hosting | Windows Hosting...