சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு டாணா என்று பெயர் வைத்துள்ளனர்.
எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்கள் ஹிட்டானதை தொடர்ந்து முன்னணி நாயகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
தற்போது மான்கராத்தே படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார், இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார்.
இந்நிலையில் எதிர்நீச்சல் பட இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இப்படத்திற்கு டாணா என பெயர் வைத்துள்ளனர்.
இந்தப் படத்தின் திரைக்கதையை பட்டுக்கோட்டை பிரபாகரன், இயக்குனர் துரை செந்தில்குமார் இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.
டாணா என்பது தமிழ் வார்த்தைதான். இதன் பொருள் காவல் என்றும், டாணாக்காரன் என்றால் காவல்காரன் என்றும் அர்த்தம் என பட்டுகோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்திற்கான நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தெரிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment