Tuesday, November 5, 2013

ஆரம்பம் தற்போதைய வசூல் நிலவரம் என்ன தெரியுமா.?


ஆரம்பம் இந்த வருடத்தின் டாப் ஓபனர்  படம் அக்டோபர் 31 ஆரம்பம் வெளியான போதே மற்ற படங்களின் கலெக்சன் காலி. நவம்பர் 2 ஆம் தேதி அழகுராஜா, பாண்டிய நாடு வெளியாக மற்றப் படங்கள் ஒரேயடியாக ஒட்டாண்டியாகிவிட்டன.

வியாழக்கிழமை வெளியான படம் முதல் நாளில் சுமாராக 1.49 கோடியை வசூலித்துள்ளது. வார இறுதியில் - வெள்ளி, சனி, ஞாயிறு - 2.90 கோடிகள். அக்டோபர் 31 முதல் நவம்பர் 3 ஞாயிறு வரை நான்கு தினங்களில் 4.4 கோடிகளை படம் வசூலித்துள்ளது. இதுவரை வெளியான அ‌‌ஜீத் படங்களில் ஆரம்பம் படமே அதிக ஓபனிங் கலெக்சனை பெற்றிருக்கிறது.

இங்கிலாந்தில் ஆரம்பம்

இங்கிலாந்தில் 37 ஸ்கிரீன்களில் ரிலீஸானது. அங்கு வார இறுதி நாட்களில் மட்டும் ஆரம்பம் படம் ரூ.1.34 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் 7 ஸ்கிரீன்களில் வெளியான ஆரம்பம் வார இறுதி நாட்களில் ரூ.33 லட்சம் வசூல் செய்துள்ளது என்று பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சிங்கம் 2வை வசூலில் முந்திய ஆரம்பம்

சூர்யா நடித்த சிங்கம் 2 இங்கிலாந்தில் ரிலீஸான வார இறுதி நாட்களில் ரூ. 1.08 கோடி வசூல் செய்தது. இதன் மூலம் ஆரம்பம் சிங்கம் 2வை வசூலில் முந்தியுள்ளது. இங்கிலாந்தில் புதிய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும் வரை ஆரம்பம் படம் தனது வசூல் வேட்டையை சில வாரங்களுக்கு தொடர்ந்து நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை பாக்ஸ் ஆபீஸ்

நவம்பர் 1ம் தேதி முதல் 4 ம் தேதி வரையிலான சென்னை பாக்ஸ்ஆபீஸில் முதலிடத்தை ஆரம்பம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஆல் இன் ஆல் அழகு ராஜாவும், மூன்றாவது இடத்தில் பாண்டிய நாடும் இருந்தது என்று சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்....!

1 comment:

  1. www.lizehost.com

    Lize Host India - Web Hosting | Domain registration | Unlimited Web Hosting | Windows Hosting...

    ReplyDelete